மதுரை:
மிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு க்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே கடந்த வாரம் அவரது குடும்பத்தினருக்கு நடத்தப்பட்ட சோதனைடியில், அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு  இல்லாத நிலையில், அவரது   மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், தற்போது அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் கேபி அன்பழகன், மின்துறை அமைச்சர் தங்கமணி கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வரும் நிலையில், தற்போது மூன்றாவது அமைச்சராக செல்லூர் ராஜூக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் மியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
ஏற்கனவே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியா க கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்த சூழ்நிலையில் தற்போது அமைச்சர் அவர்களுக்கும் கொரோனா தொற்று இருக்கக் கூடிய காரணத்தினால் அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
[youtube-feed feed=1]