சென்னை:
மிழகத்தில் கொரோனா ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக  இதுவரை 6,27,902 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும்,  ரூ.17,66,32,176 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது.

உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிரமடைந்து உள்ளது. கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா 4வது  இடத்தில் உள்ளது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில்  தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், ஊரடங்கு சமயத்தில் விதிகளை மீறி வெளியே வாகனங்களில் சுற்றியவர்களை காவல்துறை மடக்கி வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், வழக்குபதிவு செய்து  அபராதமும் வசூலித்து  வருகிறது.
அதன்படி, தமிழகத்தில்  இதுவரை (10/07/2020) காலை 9 மணி நிலவரப்படி,  8,32,680 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கை மீறியதாக 6,27,902 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இதுவரை, 7,58,944 வழக்குகளும், ரூ.17,66,32,176 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 4,717 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், 1,568 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 4,362 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாகன உரிமையாளர்கள் தினசரி காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒரு முறை 10 நபர்களுக்கு என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
வாகனம் பெற வரும்போது எப்ஐஆர் நகல், ஓட்டுனர் உரிமம் அசல் மற்றும் நகல், வாகனத்தின்  ஆர்.சி.புத்தகம் அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு காவல்துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.