சண்டிகர்:
ல்லூரி இறுதி ஆண்டு தேர்வு நடத்துவது கடினம்  என கூறியுள்ள பஞ்சாப் முதல்வர், இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 6வது கட்டமாக பல்வேறு தளவர்களுடன்  ஊரடங்கு நீடித்து வருகிறது. ஊரடங்கு காரணமாக பள்ளிகளின் இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதுபோல கல்லூரிகளிலும்  பருவத் தேர்வு, இறுதியாண்டுத் தேர்வுகள் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதே வேளையில் சில பல்கலைக் கழகங்கள் தங்களது உறுப்பு கல்லூரிகளில் தேர்வை ரத்து செய்து அறிவித்துள்ளன. இதனால் அரசுக் கல்லூரிகளிலும் தேர்வு ரத்து செய்யப்படும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், சமீபத்தில், மத்திய உயர் கல்வித் துறை செயலாளருக்கு உள்துறை அமைச்சகம் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என கடிதம் எழுதியது. அந்தக் கடிதத்தில், “பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவர் களுக்கு யுஜிசி வழிகாட்டுதலின்படி, ஆண்டு இறுதித்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். எனவே, இத்தேர்வு களை நடத்த அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் நெறிமுறைகளின்படி, உயர் கல்வி நிறுவனங்கள் ஆண்டு இறுதித் தேர்வை நடத்த முடிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிவிப்பின்படி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் பருவத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
யுஜிசியின் இந்த திடீர் அறிவிப்பு மாணவர்கள் மட்டுமின்றி பல மாநில அரசுகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், பஞ்சாபில்  கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு மிகவும் கடினம் என அம்மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார்.
மாநிலத்தில்6 கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் , மாணவர்கள் நலன் கருதி, தேர்வுகளை ரத்து செய்வது பற்றி பிரதமர் மோடிக்கும் , உள்துறை அமைச்சர் அமிஷ் ஷாவுக்கு கடிதம் எழுத உள்ளதாக அவர் தெரிவித்தார்.