19 ஆண்டுகளில் 14 லட்சம் பேரின் உயிர் குடித்த பாம்பு விஷம்…

பிரபஞ்சத்துக்கு புதிய வரவான கொரோனா வைரஸ், இதுவரை இந்தியாவில் 21 ஆயிரத்து 130 பேரைக் கொன்றுள்ளது.

ஆனால் பாம்புக்கடியால் இந்தியாவில் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது தெரியுமா?

கடந்த 19 ஆண்டுகளில் ( 2000- 2019) 14 லட்சம் பேர் பாம்புக்கடிக்கு உயிர் இழந்துள்ளனர்.

ஆண்டுக்குச் சராசரியாக 70 ஆயிரம் பேர் பாம்புக்கு இரையாகி உள்ளனர்.

இவர்களில் 70 சதவீதம் பேர் பீகார், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

ஜூன் மாதத்தில் ஆரம்பித்து  செப்டம்பர் மாதம் முடியும் மழைக்காலத்தில் தான், பெரும்பாலான பாம்புக்கடி உயிர் இழப்பு நடந்துள்ளது.

உலக சுகாதார ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

-பா.பாரதி.