‘’எம்.ஜி.ஆர். மனைவி அழைத்ததால் சின்னதிரைக்குள் நுழைந்தேன்’’

நடிகை, நாட்டியக்கலைஞர், ( கொஞ்சகாலம்) அரசியல்வாதி என அறியப்பட்ட ’வெண்ணிற ஆடை’’ நிர்மலா இப்போது எழுத்தாளர் என்ற புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

இந்தி புத்தகம் ஒன்றைத் தமிழில் மொழி பெயர்த்து வருகிறார்.

‘’எனக்குள் ஒளிந்திருந்த எழுத்தாளரை, அறிந்து கொள்ள இந்த  ஊரடங்கு எனக்குத் துணை நின்றது’’ என்று சிலாகிக்கும் நிர்மலா, தான் எழுதும் புத்தகத்தை அடுத்த ஆண்டு வெளியிடும் திட்டத்தில் இருக்கிறார்.

சில பழைய நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டார்.

‘’நான் நடித்த முதல் படம் ‘வெண்ணிற ஆடை ‘ என்று பலர் நினைக்கிறார்கள், அதற்கு முன்பே சில படங்களில் நடிக்க ஷுட்டிங் வரை சென்று பாதியில் நின்று போனது.

எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. போட்டோ ஷுட் எடுத்தார்கள். ஆனால் நான் அப்போது சின்ன பெண்ணாக இருந்ததால் அந்த வாய்ப்பு கை கூட வில்லை.

’காதலிக்க நேரமில்லை’ படத்திலும் நான் தான் நடித்திருக்க வேண்டும்.

என்னை எம்.ஜி.ஆர். மனைவி ஜானகி அம்மாள் தான் சின்னத்திரைக்கு அழைத்து வந்தார்.

அவரது உறவினரான மதுமோகன் என்பவர் ‘ஆடி வரும் தேனே’ என்ற சீரியலை தயாரித்தார். அந்த சீரியலில் நடிப்பதற்காக ஜானகி அம்மாள் என்னை பரிந்துரைத்தார்.அதன் பிறகே டி.வி.சீரியல்களில் பிசி ஆனேன்’’ என்கிறார், வெண்ணிற ஆடை நிர்மலா.

-பா.பாரதி.