தர்மசாலா:
கொரேனா தொற்று இல்லை என்ற போலி சான்றிதழ் மூலம் இம்மாச்சல பிரதேசம் தர்மசாலா சென்ற டெல்லி தம்பதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதே வேளையில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருவதால், மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலை யில், கொரோனா இல்லை என்று போலி சான்றிதழ் மூலம் இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவுக்கு சென்ற டெல்லி தம்பதிகள் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்க்ரா மாவட்ட எஸ்.பி., டெல்லி தம்பதிகளின் கொரோனா சான்றிதழ் குறித்து ஆய்வு நடத்தியபோது, அது போலியானது என்று தெரிய வந்ததாகவும், அந்த சான்றிதழில் அவர்களுக்கு கொரோனா நெகடிவ் என பதிவிடப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் காரணமாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டமையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் கொரோனா சோதனை நடத்தப்பட உள்ளதாகவும், போலி சான்றிதழ் கொடுத்தற்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.