தேனி:
தேனி மாவட்டம் போடியில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், அங்கு நாளை முதல் 23ந்தேதி ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு உள்ளது. அனைத்து வணிக நிறுவனங்கள் இயக்க தடை விதிக்கப்படுவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர்   எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
போடியில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக, தொற்று பரவலைர தடுக்கும் வகையில்  நகராட்சியில் நாளை முதல் 23ஆம் தேதி வரை புதிய கட்டுப் பாடுகள் அமல்படுத்தப் படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நகரின் அனைத்து விதமான வர்த்தக நிறுவனங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கே வந்து வினியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் தேவையில்லாமல் வெளியே வராமல் வீட்டிலேயே இருந்து நோய் தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.