குன்றத்தூர்:
வாடகைக்கு குடியிருந்த குடித்தனக்காரரிடம் வாடகை கேட்டு தகராறு செய்த வீட்டு உரிமையாளர் குடித்தனக்காரரால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சோக சம்பவம் குன்றத்தூரில் நடை பெற்றுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால் வாடகைக்கு குடியிருப்போர் பலர் வாடகை செலுத்த பணமில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில்,  குன்றத்தூரில் 4 மாதமாக வீட்டு வாடகை கொடுக்காததால், வாடகை கேட்டதால் ஆத்திரம் அடைந்த குடித்தனக்காரர்,   வீட்டின் உரிமையாளரை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஓய்வுபெற்ற வங்கி ஊழியரான திருவல்லிக்கேணியை சேர்ந்தகுணசேகரனுக்கு  சொந்தமாக குன்றத்தூரில் 2 வீடுகள் உள்ளன. இதில் ஒரு வீட்டில், அஜித் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
ஊரடங்கு காரணமாக சரியான வேலையில்லாத நிலையில், கடந்த 4 மாதங்களாக வீட்டு வாடகை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால்,  வீட்டின் உரிமையாளர் குணசேகரன் நேற்று இரவு அஜித் வீட்டிற்கு சென்று வாடகை கேட்டுள்ளார், இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்,  ஆத்திரமடைந்த அஜித் வீட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணசேகரனை  குத்தியுள்ளார்.  இதனால் அதிர்சிசி அடைந்த  குணசேகரன் அங்கிருந்து தப்பிக்கும் நோக்கில்  வேகமாக ஓடியுள்ளார். ஆனால், அவரை  அஜித்ஓட ஓட குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த  குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குணசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர், பின் கொலையாளி அஜித்தையும் கைது செய்தனர்.
இந்த கொலை சம்பவம்  அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.