திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் கேரளாவில் 301 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
இந்தியாவில் முதல்முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலம் கேரளா. ஒரு கட்டத்தில் குறைவாக, கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்ட கொரோனா தொற்று சில வாரங்களாக அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் கேரளாவில் இன்று ஒரே நாளில் 301 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 6,165 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று மட்டும் 107 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 3,561பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது, மருத்துவமனையில் 2,605 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.