சென்னை:
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள் எத்தனை உள்ளன என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் 1,089 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளது. அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 184 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன. சேலத்திற்கு அடுத்தப்படியாக சென்னையில் 158 கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன. திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா 84 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன. மதுரை மாவட்டத்தில் 75. கடலூர் மாவட்டத்தில் 59 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன. இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel