சென்னை
கொரோனா வந்து குணமடைந்த 18 ரயில்வே காவல்துறையினர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணம் அடைந்தோரின் உடலில் இருந்து பிளாஸ்மா எடுக்கப்படுகிறது,
கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள நோயாளிகளின் இரத்தத்தில் அவற்றைச் செலுத்துவது பிளாஸ்மா சிகிச்சையாகும்.
இவ்வாறு செலுத்தப்படுபவர் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து அவர்கள் விரைவில் குணம் அடைகின்றனர்.
இந்த சிகிச்சை முறை வெற்றி அடைந்துள்ள போதிலும் இன்னும் சோதனை அளவிலேயே உள்ளன.
இந்த சிகிச்சைக்காகக் குணமடைந்தோரிடம் இருந்து பிளாஸ்மா தானமாகப் பெறப்படுகிறது.
அவ்வகையில் இன்று பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் தானம் பெறப்பட்டது.
கொரோனாவில் இருந்து குணம் அடைந்த ரயில்வே காவல்துறையைச் சேர்ந்த 18 பேர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர்.