சென்னை:
“விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது” என மத்தியஅமைச்சரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மனு அளித்தார்.
மத்திய அரசு ‘மின்சார சட்ட திருத்த மசோதா – 2020’ ஒன்றைக் கொண்டுவந்து, கடந்த ஏப்ரல் 17 அன்று மாநிலங்களின் கருத்தை அறிவதற்காக அனுப்பியுள்ளது, அதன்படி, இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் நிலை மற்றும் மின்சார வாரியம் விரையில் தனியார் மயம் ஆக்கப்படும் வகை யிலும் ஷரத்துக்கள் உள்ளன. இதனால் சேவைத் துறை என்பது வர்த்தகமாக மாற்றப்படுவதுடன், மின் கட்டணமும் உயரும் ஆபத்து ஏற்படும்.
இதனால், மிகவும் நலிவுற்ற ஏழைகள், தாழ்த்தப்பட்டோரின் குடிசைகள், கைத்தறி நெசவாளர் களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரமும் ரத்தாகும் நிலை உருவாகும். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், புதிய மின்சார மசோதா குறித்து ஆலோசிக்க மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் மின்சார திருத்த மசோதாவில் தமிழகத்தின் நிலைப்பாடு, புதிய மின்விநியோக திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்யக் கூடாது என முதலமைச்சர் வலியுறுத்தியதாக அறிவிக்கப்பட் டுள்ளது.
இதேபோல வீட்டு உபயோகத்துக்கு 100 யூனிட் இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்கப்பட வகை செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். விவசாயிகளுக்கும், வீட்டு உபயோ நுகர்வோர்க ளுக்கும் ‘டான்ஜெட்கோ’ நிறுவனம் மூலம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மானிய பட்டுவாடா நடைமுறையை மாநில அரசின் வசமே விட்டுவிட வேண்டும். இலவச மின்சாரத்துக்கு எதிரான சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பம்புசெட்டுகளுடன் இணைந்த தனித்தனியான ‘கிரிட்’டை அமைத்துக் கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும். மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திலிருந்து 100% மான்ய தொகையுடன் இதை நடத்தலாம். உதய் திட்டத்தின் கீழ் செயல் மூலதனத்துக்கான நெறிமுறைகளை தளர்த்துமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ரூ.20 ஆயிரத்து 622 கோடி நிதி உதவிக்கு ஏற்கனவே டான்ஜெட்கோ நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ஆகவே சலுகை வட்டி விகிதத்தில் நிதி உதவியை பயன்படுத்திக் கொள்ள, இந்தத் தொகையை வழங்கிட வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் விஷயங்கள் குறித்தும் முதல்வர், மத்திய அமைச்சருடன் விவாதித்தார்.
இவ்வாறு தமிழகஅரசு தெரிவித்துள்ளது.