சென்னை:
தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடைவிதிக்கப்படுவதாக தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. கவர்னரின் உத்தரவின் பேரில் மாநில உள்துறை செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில், காவல்துறையினருடன் இணைந்து ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களும் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. மேலும், பல மாவட்டங்களில் உடனே ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தடை விதித்தனர்.
இந்த நிலையில், ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்திக்கொள்ள சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என 4 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், மாநில டிஜிபியின் அறிக்கையின் பேரில், தமிழகம் முழுவதும் ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. மாநில கவர்னரின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில உள்துறை செயலாளர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Patrikai.com official YouTube Channel