சென்னை:
மிழகஅரசின் பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் புதிய 5 பால் பொருட்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
கொரோனா தொற்று பரவலில் சிக்கி தமிழகமே திண்டாடி வரும் நிலையில், கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் நோய் எதிர்ப்ப சக்திக்கொண்ட 5 புதிய பால் பொருட்களை ஆவின் நிறுவனம் தயாரித்து உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி தரும் இஞ்சி, எலுமிச்சை, துளசி, மிளகு, சீரகம், பெருங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய மோர் , சாக்கோ லஸ்ஸி உள்பட  5 புதிய பால் பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளது. 90 நாள்கள் வரை கெடாத வகையிலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்  வகையில் தயாரிக்கப்பட்ட இந்த பொருட்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் தலைமை செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.