சென்னை :
தமிழகத்தில் நாளுக்கு நாள் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துவருவது கவலையளிப்பதாக உள்ளது.
28-6-2020 தொடங்கி இன்று 7-7-2020 வரையிலான 10 நாட்களில் தமிழகத்தில் இதுவரை 611 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் மட்டும் இந்த 10 நாட்களில் 346 பேரும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 265 பேரும் கொரோனா வைரசுக்கு பலியாகி இருக்கின்றனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நான்காயிரத்தில் இருந்து 3616 ஆக குறைந்திருந்தாலும் சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை 2413 ஆக உள்ளது.
இந்நிலையில், சென்னை கிண்டியில் 127 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டுள்ள, வெண்டிலேட்டர் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் அடங்கிய 750 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிறப்பு மருத்துவமனையை தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரசுக்காக தற்போது 75,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், சென்னையில் மட்டும் 17,500 படுக்கைவசதிகள் உள்ளதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.