ஜினிகாந்த நடித்த ’பேட்ட’ படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் அடுத்து தனுஷ் நடிக்குக் ஜெகமே தந்திரம் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். கடந்த மே 1ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா லாக்டவுனால் படம் ரிலீஸ் ஆகவில்லை. தியேட்டர் திறக்கப்பட்டுவிடும் என்று காத்திருந்தும் இன்னும் ஊரடங்கு முடிந்த பாடில்லை. இதற்கிடையில் தியேட்டர் ரிலீஸுக்காக காத்திருந்த படங்கள் ஒவ்வொன்றாக ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி வருகிறது. ஏற்கனவே பொன்மகள் வந்தாள், பெண்குயின் என ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் ஒடி டி தளத்தில் வெளி யானது. அடுத்து யோகிபாவு. பரலட்சுமி சரத் படங்கள் ஒடிடியில் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் ஜெகமே தந்திரம் படம் ஒடி டி தளத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது. அதை கார்த்திக் சுப்பராஜ் மறுத்து வந்தார். தற்போது ஒடிடி தளத்திலிருந்து பெரிய விலைக்கு இப்படத்தை கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி தயாரிப்பு தரப்பில் தனுஷிடம் பேசியபோது ஒடிடியில் வெளியிடுவது பற்றி தயாரிப்பாளரே முடிவு செய்துகொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது. இதை தயாரிப்பு தரப்பு தனுஷிட மிருந்து கிடைத்த கிரீன் சிக்னலாக பார்க்கி றார்கள். எனவே ஜெகமே தந்திரம் ஒடிடியில் ரிலீஸ் பற்றி விரைவில் அறிவிப்பு வரும் என்று தெரிகிறது.

[youtube-feed feed=1]