சென்னை:
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில்தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,14,978 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,747 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,017 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 44,882 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 24,052 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1082-ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய மண்டலவாரி கொரோனா விவரத்தைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,990 பேரும் அண்ணா நகரில் 2,383 பேரும் ராயபுரம் மண்டலத்தில் 1,999 பேரும் தேனாம்பேட்டையில் 2,447 பேரும் தண்டையார்பேட்டையில் 2,810 பேரும் அடையாறு மண்டலத்தில் 1,673 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது.