பீஜிங்:
கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமான சீனாவில் இருந்து, தற்போது புதிய தொற்று ஒன்று பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘புபோனிக்_பிளேக்’ என்று அழைக்கப்படும் இந்திய புதிய வைரஸ் நோய் 24மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோரின் உயிரை கொன்றுவிடும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இன்றுவரை உலக நாடுகளை புரட்டிப்போட்டு வருகிறது. இந்த பீதியே இன்னும் மக்களிடம் இருந்து மறையாத நிலையில், புதிய பிளேக் தொற்று பரவி வருவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனாவை விட வேகமாக பாதிக்கப்பட்டோரின் உயிரைக்குடிக்கும் இந்த பிளேக் தொற்று குறித்து, சீனர்கள் விழிப்புணர்களுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மங்கோலியா என்ற மாகாணத்தில் உள்ள சுயாட்சி பகுதியான பையனூர் என்ற நகரில், சகோதரர்கள் இருவர் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு சமீபத்தில் உயிரிழந்தனர். அவர்களது ரத்த மாதிரிகளை பரிசோதித்ததில், அவர்களின் உயிரிழப்புக்கு காரணமாக புபோனிக் (வேகமாக பரவும் வகை) பிளேக் நோய் பாதிப்பு என்று நம்பப்படுகிறது.
உயிரிழந்த சகோதரர்கள் இருவரும் காட்டு அணில் கறியை உண்டதாலேயே இந்த பிளேக் நோய் அவர்களுக்கு தொற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் காட்டு அணில் கறியை மக்கள் உண்ண வேண்டாம் என்றும் அரசு எச்சரித்துள்ளது. உயிரிழந்த இருவருடன் தொடர்பில் இருந்து 146 பேரை தனிமைப்படுத்தி அவர்களின் உடல் நிலையை சீன அரசு கண்காணித்து வருகிறது.
புபோனிக் பிளேக்கானது, எலி போன்ற கொறிக்கும் வகை உயிரினங்களில், வாழும் உன்னிகளின் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வகை பாக்டீரியா. ஆகையால் மக்கள் அவ்வகை பிராணிகளை உட்கொள்ள வேண்டாம் என்றும், எலி, அணில், மர்மோத் ( marmot) போன்ற கொறி விலங்குகளின் இறைச்சியை உண்ண வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மூன்றாம் எண் நோய் கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டு, மக்கள் பின்பற்றுமாறு சீன அரசு வலியுறுத்தியுள்ளது. இந்த நோய் பரவலை தடுக்க, விதிமுறைகளை இந்த ஆண்டின் இறுதி வரை பின்பற்ற வேண்டும் என்றும், பொதுமக்கள் தங்களை சுயமாக பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த 10 ஆண்டுகளில் புபோனிக் பிளேக்கால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். அவ்வப்போது நோய் பரவல் தொடங்கும் போது, அரசு தீவிரமாக கட்டுப்படுத்தி வருவதால் இது வரை பெரிய அளவில் பரவல் ஏற்படவில்லை. இருப்பினும் கொரோனா வைரசால் உலகமே பரிதவித்து வரும் நிலையில், தற்போது சீனாவில் மீண்டும் பிளேக் தொற்று ஏற்பட்டிருப்பது உலக மக்களிடையே அச்சத்தையே ஏற்படுத்தி உள்ளது.
உலக வெப்பமையமாதல், சூழலியல் சீர் கேடுகள் காரணமாக, இனி வரும் காலங்களில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு இன்னும் பல வைரஸ்கள் பரவும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
அண்டார்டிகா, ஆர்டிக் போன்ற உறை பனி பகுதிகளில் பல கோடி ஆண்டுகளாக. ஐஸ் கட்டிகளுக்கு அடியில் தூங்கிக் கொண்டிருக்கும் வைரஸ்கள், புவி வெப்ப மையமாதலால் ஏற்படும் பனிக்கட்டி உருகுதலில் வெளி வரும் வாய்ப்பு உள்ளது. அப்படி வெளிவரும் வைரஸ் கிருமிகள், விலங்குகள் மூலம் கடத்தப்படும். முதலில் விலங்கிடமிருந்து விலங்குகளுக்கு பரவும். பின் விலங்கிடமிருந்து மனிதர்களுக்கு பரவும். கொரோனா ஒரு சாம்பிள் மட்டும் தான். முழு வீச்சில் சூழலியல் சீர்கேடுகளை தடுக்காவிடில், இன்னும் இந்த உலகம் பேராபத்துகளை சந்திக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த புதியே பிளேக் நோயானது 24மணிநேரத்தில் ஆளைக்கொல்லக்கூடியது_என்றும் உலக சுகாதாரமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.