டெல்லி:
ந்தியாவில் கொரோனா தடுப்பு லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்பட்டால் தொழிலாளர்களின் ஊதியத்தில் 50% குறைக்கும் நிலை உருவாகும் என்று பிரபல தொழில் அதிபரான ராஜீவ் பஜாஜ் தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகள் சுமார் 2 மாதங்களுக்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அரசு வழங்கிய தளர்வுகளால் திறக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கட்டுப்பாடுகள், குறைந்த அளவிலான தொழிலாளர்கள், கொரோனா பயம் காரணமாக பலர் வேலைக்கு வர மறுக்கும் நிலையில், பல தொழிற்சாலைகள் மீண்டும் முழுமையாக இயங்கமுடியாத சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில்,  பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியும், நிர்வாக இயக்குநருமான ராஜிவ் பஜாஜ், லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்பட்டால் தொழிலாளர்களின் ஊதியத்தில் 50% குறைக்கும் நிலை உருவாகும் என்று தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே மத்தியஅரசு அறிவித்துள்ள லாக்டவுன் குறித்து, கடுமையாக விமர்சித்திருந்தார்.  லாக்டவுன் நாட்டின் பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்துவிட்டது,  கொரோனா பாதிப்பைக் குறைப்பதற்குப் பதிலாக, பொருளா தாரத்தை அழித்துவிட்டீர்கள். இந்தியாவில் மிகவும் கடுமையான முறையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாதிரியான ஊரடங்கை வேறு எங்கும் நான் கேள்விப்பட்டதில்லை. பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது மிகவும் கடினமான ஒரு விஷயம் என்று சாடியிருந்தார்.
மேலும்,  “மேற்கு நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு அரசுகளிடமிருந்து நேரடி ஆதரவு கிடைக்கிறது.  ஊழியர்களுக் கான செலவில் 85 விழுக்காட்டை அரசே வழங்கப்படுகிறது, ஆனால், அதுபோன்ற ஆதரவை இந்தியாவில் பார்க்கமுடியவில்லை” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது 6வது கட்டமாக ஜூலை 30ந்தேதி வரை ஊரங்கு பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்பட்டுள்ள நிலையில், ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பது தவிர வேறு வழியில்லைஎன்று தெரிவித்து உள்ளார்.  தொழில் நிறுவனங்களின் தினசரி தேவையை அரசால் பூர்த்தி செய்ய முடியாது. ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நிச்சயமாக ஆதரவளிக்கலாம் என்று தெரிவித்து உள்ளார்.
மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்கபாத்தில்  உள்ள வாகன உற்பத்தி தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களில் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளதாகவும், கொரோனா நேர்மை சோதனை செய்த பலர் வேலைக்குவருவதை தவிர்த்து வருவதாகவும், பலர் ஏற்கனவே கொரோனா கட்டுப்பாட்டு மண்லடங் களுக்குள் சிக்சி இருப்பதாகவும் கூறியவர்,  உற்பத்தி நிலையத்தில் மக்கள் தொற்று ஏற்பட்டு இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று  குற்றம் சாட்டுவது  சரியானதல்ல என்று தெரிவித்து உளாளர்.
ஒவ்வொரு ஊழியரும் நேர்மறை சோதனைக்கு, அவர்களுக்கு நெருக்கமாக பணிபுரியும் நான்கு பேர் தனிமைப் படுத்தப்பட வேண்டும், இது உற்பத்தித்திறனை பாதிக்கிறது, என்று கூறியவர், இதே நிலை நீட்டித்தால், ஊழியர்களுக்கு 50 சதவிகித சம்பளம் மட்டுமே வழங்க முடியும் என்று கூறியுங்ளளார்.
அவுரங்காபாத்தில் சமூக இடைவெளி பூஜ்ஜியமாக உள்ளது, 60 சதவிகித மக்கள் முகமூடி அணியவில்லை, “அவுரங்காபாத்தில் இருக்க வேண்டிய பாதுகாப்பான இடம் தொழிற்சாலைக்குள் உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பஜாஜ் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தெங்கேட் பாஜிராவ், கொரோனா தொற்று பரவல் காரணமாக, மக்கள் வேலைக்கு வருவதற்கு பயப்படுகிறார்கள், சிலர் வருகிறார்கள், ஆனால் சிலர் விடுப்பு எடுத்துக்கொள்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.