ஜெனிவா:
உலக அளவில் இன்று காலை 7 மணி நிலவரப்படி, கொரோனா பாதிப்பு 1 கோடியே 15 லட்சத்தை கடந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,15,55,414 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 75ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
அதுபோல கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3,572 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 36ஆயிரத்து 720 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களில் 58ஆயிரம் பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 65 லட்சத்து 36ஆயிரத்து, 720 ஆக உள்ளது.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும், 44ஆயிரம் பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்கி உள்ளது.
பிரேசில் மற்றும் மெக்சிகோ நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்.
அதே வேளையில், கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயின், பிரான்ஸ், ஸ்வீடன் நாடுகளில் புதிதாக கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு பதிவாகவில்லை என்பதும் வரவேற்கத்தக்கது.
இது தவிர தென் ஆப்பிரிக்கா, மெக்சிகோ, ரஷ்யா, மெக்சிகோ நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.