புதுடெல்லி:
நீட் தேர்வில் ஓபிசி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று சோனியா காந்தி எழுதிய கடிதத்தை கருத்தில் கொள்ளுமாறு கேட்டுள்ளார் பிரியங்கா காந்தி.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா சனிக்கிழமை அன்று,  மருத்துவ நுழைவுத் தேர்வில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அமல்படுத்துவது,  இந்த வகுப்பின் இளைஞர்களுக்கு அநீதி என்று கூறியுள்ளார். மேலும் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் கடிதத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி வத்ரா கேட்டுக்கொண்டுள்ளார்.
சமூக வலைத்தளமான ட்விட்டரில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி: “நீட் தேர்வில் தேசிய ஒதுக்கீட்டின் கீழ் உள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மருத்துவ நிறுவனங்களில் ஓபிசி மாணவர்களுக்கு நியாயமான கோரிக்கையை தான் சோனியா காந்தி கேட்டுள்ளார், இது சமூக நீதிக்கான கோரிக்கை, இதனை மத்திய அரசு கருத்தில் கொண்டு செயல்படுத்தும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.  மேலும் இதனுடன் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தையும் இணைத்திருந்தார்.