சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் வரை 26 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் உச்சத்தில் உள்ள கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் சில நாட்களாக சென்னையில் கொரோனா தொற்று 2 ஆயிரத்தை தாண்டி வருகிறது.
நேற்று மட்டும் 1,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.  மொத்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 66,538 ஆக உள்ளது. இந்நிலையில் சென்னையில் 24 மணி நேரத்தில் வரை 26 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 11 பேர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 5 பேர், ஓமந்தூரார் மருத்துவமனையில் 5 பேர் மற்றும் தனியார் மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

[youtube-feed feed=1]