ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவர் கோபிசந்த். இவர் தற்போது தெலுங்கு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவரும் நடிகை பாவனாவும் ஜோடி யாக நடித்த ஆன்டரி என்ற படத்தை தயாரித்த துடன் கோபிசந்த் நடித்த ரணம், யக்னம் போன்ற படங்களையும் தனது சகோதரர் பொகுரி பாபு ராவுடன் இணைந்து தயாரித் தார் பொகுரி ராமராவ். ஐதராபாத்தில் வசிக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

சமீபத்தில் பொகுரி ராமராவ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். 65 வயதாகும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவர் மரணம் அடைந்தார். கொரோனா வுக்கு தயாரிப்பாளர் பலியானது திரையு லகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தெலுங்கு திரையுலகில் சமீபகாலமாக கொரொனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நடிகை சமந்தாவின் தோழியும் காஸ்டியூம் டிசைனருமான ஷில்பா ரெட்டி மற்றும் அவரது கணவர் இரு வரும் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டனர். சிகிச்சைக்கு பிறகு அவர்கள் குணம் அடைந்து வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு டிவி சீரியலில் நடிக்கும் நடிகை நவ்யா சாமி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதுபோல் தயாரிப் பாளர் பந்தால கணேஷ், டிவி நடிகர் ரவி போன்றவர்கள் கொரோனா தொற்றுக்குள் ளாகியிருகின்றனர்.

[youtube-feed feed=1]