பாட்னா:

பீகார் மாநிலத்தின் முதல் மந்திரியான நிதிஷ் குமார் மாநில சட்டமன்ற மேலவை தலைவரான அவடேஷ் நாராயன் சிங் உடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு பின் நாராயன் சிங்கிற்கு கொரோனா வைரஸ் பரவி இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, முதல் மந்திரியான நிதிஷ் குமாருக்கும் கொரோனா பரவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதனால், முதல் மந்திரி நிதிஷ் குமார் நேற்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

பரிசோதனையில் நிதிஷ் குமாருக்கு கொரோனா வைரஸ் பரவவில்லை என முடிவு வெளியாகியுள்ளது. இதனால் அவர் சற்று ஆறுதல் அடைந்துள்ளார்.

இருந்தபோதிலும், தன்னுடனும், சட்டமன்ற மேலவை தலைவருடனும் நெருங்கிய தொடர்பில் இருந்த அதிகாரிகள் அனைவரையும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நிதிஷ் அறிவுறுத்தியுள்ளார்.