சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது.  இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்ந்துள்ளது.
இன்று பாதிப்புக்குள்ளான 4,280  பேரில் 1842 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இதனால் சென்னை யில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66,538 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இதுவரை  41,309 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில், 24,195  பேர்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சென்னையில் இன்று ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1033 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விருதுநகர் மாவட்டங்களிலும் தொற்று தீவிரமடைந்து உள்ளது.
செங்கல்பட்டு 215 , திருவள்ளூர் 251 , காஞ்சிபுரம் 134 , மதுரை 352 , அரியலூர் 3 , கோவை 67 , கடலூர் 75 , திண்டுக்கல் 22 , கன்னியாகுமரி 69 , சேலம் 70 , ராமநாதபுரம் 149 , ராணிப்பேட்டை 104 , சிவகங்கை 48 , தென்காசி 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டம் வாரியாக பாதிப்பு விவரம்: