துசகோல்சா, அலபாமா
அலபாமா மாணவர்கள் யாருக்கு முதலில் தொற்று ஏற்படும் எனக் கண்டறிய கொரோனா பார்ட்டி நடத்துகின்றனர்.
அமெரிக்காவில் கொரோனா தொற்று மிக மிக அதிக அளவில் பரவி வருகிறது. இந்நாட்டு மக்கள் அதைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை எனத் தலைமை மருத்துவர் அந்தோணி ஃபாசி வருத்தம் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்ததை போல் அலபாமா மாவட்டத்தில் உள்ள துசகோல்சா கல்லூரி மாணவர்கள் ஒரு கொரோனா பார்ட்டி என்னும் விபரீத பார்ட்டி ஒன்றை நடத்தி உள்ளனர்.
கொரோனா பாதிப்பு அடைந்த ஒருவரை அழைத்து வந்து அவர்களுடன் சேர்ந்து பழகி உணவருந்தி யாருக்கு முதலில் கொரோனா பாதிப்பு வருகிறது எனக் கண்டறிய இந்த பார்ட்டியை நடத்தி உள்ளனர். இதற்காகப் பந்தயமும் கட்டி உள்ளனர்.
இது குறித்து இந்நகர நகராட்சி கவுன்சிலர் சோன்யா மெக்கின்ஸ்டிரி, ”இந்த மாணவர்களுக்குச் சிறிதும் புரிதல் இல்லாமல் இந்த நடவடிக்கைகளைச் செய்து வருகின்றனர். இவை அனைத்தும் வேண்டுமென்றே செய்யப்படுபவை ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.