சென்னை :
தாம்பரம் டிபி ஆஸ்பத்திரியில் வகைப்படுத்துதல் மையத்தை திறந்து வைத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், 500 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தமிழகத்தில், சென்னை தாம்பரம் சானட்டோரியத்தில் உள்ள அரசு நெஞ்சுக நோய் (டிபி) மருத்துவமனை வளாகத்தில், கொரோனா வகைப்படுத்துதல் மையம் முதன்முதலாக திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
இதற்கு அடுத்து கிண்டி கிங்ஸ் நிறுவனத்தில் தயாராகி வரும் சி.டி.ஸ்கேன் வசதியோடு 700 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை பயன்பாட்டுக்கு வர உள்ளது.
சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என முதலமைச்சர் தொடர்ந்து உத்தரவிட்டு வருகிறார். புதிதாக 10 லட்சம் டெஸ்ட் கிட் வாங்க ஆணை பிறப்பித்துள்ளார். அதேபோல் 6 CT ஸ்கேன் இயந்திரம் வாங்கவும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
கொரோனா பாசிடிவ் ஆனவர்கள் யாரும் பதட்டம் அடைய வேண்டாம், பயப்பட வேண்டாம். அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவ முகாம்களுக்கு வந்து உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அனைவரையும் குணப்படுத்த அரசு அனைத்து முயற்சியையும் எடுத்து வருகிறது.