விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் மாளவிகா மோகனன். அதற்கு முன்பே இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ரஜினியின் ’பேட்ட’ படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்தார். மாளவிகாவின் தந்தையாக மகேந்திரன் நடித்திருந்தார். இப்படத்தில் ரஜினி தனக்கு சொன்ன ஃபிட்னஸ் சீக்ரெட் பற்றி மாளவிகா வெளியிட்டார்.

அவர் கூறியதாவது:
பேட்ட படத்தில் எனது தந்தையாக மகேந்திரன் நடித்தார். காட்சிப்படி அவர் இறந்துவிடுவார். பின்னர் எனக்கு தமிழில் பேசுவது கொஞ்சம் தடுமாற்ற மாக இருந்தது. அப்போது ரஜினிசார் என்னை அழைத்து தைரியம் சொன்ன துடன் குடும்பத்தில் இருப்பதுபோன்ற உணர்வை அளித்தார். மேலும் உடலை எப்படி ஃபிட்டாக வைத்துக்கொள்வது என்பதுபற்றி கூறினர். அப்போது கிரியா யோகா மற்றும் தியானம் பற்றி எனக்கு சொல்லித்தந்தார். அது எனக்கு பயனுள் ளதாக இருந்தது. அது என்னை ஃபிட்டா கவும் வைத்திருக்கிறது.
இவ்வாறு மாளவிகா மோகனன் கூறினார்.
Patrikai.com official YouTube Channel