புதுடெல்லி: 
கொரோனா தொற்று காரணமாக இந்த வருட விநாயகர் சதுர்த்தி விழாவை தவிர்க்கும் முடிவை
ப. சிதம்பரம் பாராட்டியுள்ளார்.
மும்பையில் உள்ள லால்பாகில் அடுத்த மாதம் 22ஆம் தேதி, 11 நாள் தொடர்ந்து உற்சவம் காணும் விநாயகர் சதுர்த்தியை தவிர்க்குமாறு மத்திய அரசு எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் பாராட்டியுள்ளார்.
இந்த முடிவை ஏற்று 11 நாள் விநாயகர் சதுர்த்தி விழாவை  கைவிட்ட அதன் அமைப்பாளர்களை நான் மனதார வாழ்த்துகிறேன்….. மேலும் அந்த 11 நாட்கள் இவர்கள் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க பிளாஸ்மா டொனேஷன் முகாமை நடத்தலாம் என்று தன்னுடைய அறிக்கையில் பா. சிதம்பரம் தெரிவித்திருந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் லால்பாக் மக்கள், இந்த விநாயகர் சதுர்த்தியை மிக கோலாகலமாக கொண்டாடுவார்கள், முன் எப்போதும் இல்லாத பெரும் கூட்டத்தோடு இந்த  விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெரும், இதில் லால்பாகில் மட்டுமல்லாமல் வெளியிலிருந்து வரும் மக்களும் கலந்து கொள்வர். ஆனால் இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக விநாயகர் சதுர்த்தி கைவிடப்படுகிறது, அரசின் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்ட லால்பாக் மக்கள் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை ஒரு சுகாதார திருவிழாவாக நாங்கள் கொண்டாடவிருக்கின்றோம்,  இதனால் அந்த பதினோரு நாட்களும் நாங்கள் பிளாஸ்மா டொனேஷன் முகாமை நடத்துவது மட்டுமல்லாமல், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இந்த கொரோனா காலத்தில் உதவும்படி ரூபாய். 25 லட்சம் கொடுப்பதாகவும் முடிவு செய்துள்ளோம் என்று கூறியிருக்கின்றனர்.
மும்பை லால்பாகில் வருடாவருடம் நடக்கும் இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு விநாயகர் சிலை மிக உயரமாக இருக்கும், மேலும் மும்பையில் உள்ள அனைவருமே இதில் கலந்து கொண்டனரா என்று வியந்து பார்க்கும் அளவிற்கு கூட்ட நெரிசல் காணப்படும்.