சென்னை:
சென்னையில் கொரோனா பாதிப்பு 60,533 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் பாதிப்பு மக்களிடையே பதற்றத்தை எற்படுத்தி வருகிறது. இன்று 7 வது நாளாக கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது.
இன்று பாதிக்கப்பட்டுள்ள 3,882 பேரில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 2182. சென்னையில் 3 வது நாளாக 2 ஆயிரத்தை கடந்த பாதிப்பு பதிவாகியுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு- 60,533ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இதுவரையில் 36,826 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 22,777 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 929 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
மாவட்டம் வாரியாக விவரம்:
தமிழகத்தில் இன்று 35 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது:

சென்னை – 2,182
மதுரை – 297
செங்கல்பட்டு – 226
சேலம் – 178
திருவள்ளூர் – 147
ராமநாதபுரம் – 111
காஞ்சிபுரம் – 86
வேலூர் – 77
விருதுநகர் – 45
தி.மலை – 42
திண்டுக்கல் – 35
நெல்லை – 33
தேனி – 33
குமரி – 33
திருச்சி – 31
புதுக்கோட்டை – 30
சிவகங்கை – 30
க.குறிச்சி – 28
விழுப்புரம் – 27
கோவை – 23
தென்காசி – 21
ஈரோடு – 19
நீலகிரி – 18
திருப்பத்தூர் – 17
தூத்துக்குடி – 15
திருவாரூர் – 13
திருப்பூர் -10
நாகை – 9
ராணிப்பேட்டை – 8
கடலூர் – 8
தஞ்சை – 7
கிருஷ்ணகிரி – 5
கரூர் – 4
தர்மபுரி – 3
நாமக்கல் – 3
Patrikai.com official YouTube Channel