தமிழகத்தில் மே 1ந்தேதி கொரோனா பாதிப்பு நிலவரம்:
மே 1ந்தேதி நிலவரப்படி, அன்றைய தினம் 203 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா வால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,526ஆக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக சென்னையில் மட்டும் இன்று 176 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும், 11 மாவட்டங்களிலும் கொரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 906-ஆக உயா்ந்துள்ளது. இவர்களில் 216 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15 பேர் மரணம் அடைந்திருந்தனர.
தமிழகத்தில் ஜுன் 1ந்தேதி கொரோனா பாதிப்பு நிலவரம்:
ஜூன் 1ந்தேதி நிலவரப்படி தமிழகத்தில் ஒரே நாளில் அதிகபட்சமா 1162 பேர்பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 23, 495 ஆகி உயர்ந்தது. அன்றைய நிலவரப்படி, 184 பேர் மரணம் அடைந்திருந்தனர்.
ஆனால், கடந்த 30 நாட்களில் கொரோனா தமிழகத்தில் ருத்ர தாண்டவமாடி உள்ளது.
ஜூன் 1ந்தேதி அன்று 23, 495 ஆக இருந்த பாதிப்பு இன்றைய ஜுன் 30ந்தேதி மாலை நிலவரப்படி, 90,167 ஆக உயர்ந்துள்ளது. 30 நாட்களில் மூன்று மடங்கு பாதிப்பு அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி (ஜூன் 30ந்தேதி) 1,201 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் (7-31) – ஒருவர் மட்டுமே உயிரிழந்த நிலையில், ஏப்ரல் மாதம்(1-30) உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக மட்டுமே இருந்தது. ஆனால், மே மாதம் (1-31) கொரோனாவுக்கு பலியோனார் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்தது. ஆனால், ஜூன் மாதம், உயிரிழப்பு கடுமையாக அதிகரித்து வந்துள்ளது. இந்த ஒரு ( ஜூன் மாதம் (1-30) மாதத்தில் மட்டுமே 1,041 பேர் கொரோனாவால்பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா உயிரிழப்பு 1,201 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல், கடந்த மார்ச் மாதம் தொடங்கிய நிலையில், தொற்று பரவ ஆரம்பித்த 4வது மாதமான ஜூன் மாதம் அதன் பாதிப்பு உச்சத்தை அடைந்துள்ளது. இதன் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறை வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
கொரோனா பரவல் தீவிரமாகி வருவது மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தை உருவாக்கி வருகிறது. பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருந்து, கொரோனா எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டியதும் அவசியமாகிறது.
ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையுடனும், சமூக இடைவெளியுடன், முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து எச்சரிக்கையுடன் செயல்பட்டால், கொரோனாவின் பாதிப்பில் இருந்து எளிதில் விடுபட முடியும்.