வுகான்

சீனாவில் கிடைத்துள்ள 83 டன் போலித் தங்கக் கட்டி விவரங்களால் தங்கச் சந்தையில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பல்லாண்டு காலமாகப் போலி கரன்சி நோட்டுக்கள் சர்வ சகஜமாக வலம் வருவது வழக்கமாக உள்ளது.   இதில் இந்திய நோட்டுக்கள் மட்டும் இன்றி பல நாட்டு நோட்டுக்களும் உள்ளன.   ஆனால் தங்கத்தில் போலித் தங்கம் என்பது எப்போதாவது ஒரு முறை நடக்கும் விஷயமாகும்.  அதுவும் மிகச் சிறிய அளவில் நகைக்கடைகளில் போலித் தங்கம் கை மாறி பிடிபட்டுள்ளதை நாம் இதுவரைக் கண்டுள்ளோம்.

இவ்வாறு சமீபத்தில் ஒரு மிகப் பெரிய மோசடி நடந்தது தற்போது தெரிய வந்துள்ளது.  இது கடந்த 10 வருடங்களாகச் சீனாவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது,   அதுவும் வங்கிக் கடன் பெற இந்த போலித் தங்கக் கட்டிகளை ஈடாகக் காட்டி கடன் பெற்று இந்த போலித் தங்கத்தில் நகைகளை செய்து வர்த்தகம் நடந்துள்ளது.   தற்போது இந்த நிறுவனம் அளித்துள்ள ஈடே போலியாகி உள்ளது.

இது பற்றி அறிந்துக் கொள்ள நாம் முதலில் வுகான் கிங்கோல்ட் ஜுவல்லரி நிறுவனம் குறித்து தெரிந்துக் கொள்வோம்.  இந்த நிறுவனத்தின் பெயரை வைத்தே இது வுகான் நகரைச் சேர்ந்த நகை தயாரிக்கும் நிறுவனம் என்பது நன்கு விளங்கும்.   இந்த நிறுவன வெப்சைட்டில் தங்கமயமான எதிர்காலம் கொண்ட நிறுவனம் என ஆங்கிலத்தில் தெனடுகிறது.  ஆனால் உண்மையில் இது செம்புமயமான என இருந்திருக்க வேண்டும்.

ஏனென்றால் இந்த நிறுவனத்திடம் இருந்த தங்கங்கள் தங்க முலாம் பூசிய செம்பு ஆகும்.   இந்த நிறுவனம் இதைக் காட்டி நிதி நிறுவனங்களிடம் இருந்து சுமார் 280 கோடி டாலர் கடன்பெற்றுள்ளது. கடந்த 5 வருடங்களாக இந்த நிறுவனம் தன்னிடம் இருந்த தங்கம் என ஈடாகக் காட்டியவை அனைத்தும் தங்க முலாம் பூசிய செம்பு கட்டிகள் ஆகும்.  இந்த கடன்களுக்கு இன்ஷ்யூரன்ஸ் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் பெயர் உலகின் மிகப் பெரிய தங்கச் சுரங்கமான கின்ரோஸ் கோல்ட் என்னும் பெயரில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.  இந்த தங்க நிறுவனமும் வுகான் நகரிலேயே அமைந்துள்ளது.  கின்ரோஸ் கோல்ட் நிறுவனம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிறுவனமாகும்.   இது சீனாவின் முன்னாள் ராணுவ அதிகாரியான ஜியா ஜின்ஹாங் என்பவரால் நடத்தப்படுகிறது.

இந்த நிறுவனம் ஈடாகக் காட்டியுள்ள 83 டன் போலித் தங்கம் முழுவதும் போலித் தங்கமாகும்.  இதற்கு இன்ஷ்யூரன்ஸ் பெறப்பட்டுள்ளதால் நிதி நிறுவனங்களுக்கு எவ்வித இழப்பும் இருக்காது.   ஆனால் சிறிய அள்வில் காப்பீடு  செய்துள்ளவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்.  அதுமட்டுமின்றி இந்த போலித் தங்கம் சிறிது சிறிதாக தங்க மார்க்கெட்டில் இறக்கப்படும் அபாயமும் உள்ளது.

கிங்கோல்ட் நிறுவனம் கடன் வாங்கி இருந்த நிறுவனம் டங்குவான் டிரஸ்ட் ஆகும். இந்த நிறுவனம் திவாலாகும் நிலையை அடைந்துள்ளது.  அந்த நஷ்டத்தைச் சரிக்கட்ட இந்த நிறுவனத்தின் தங்க விவரம் குறித்து ஆராய்ந்த போது போலித் தங்க விவகாரம் வெளியகை உள்ளது.  இது மற்ற நிதி நிறுவனங்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இதையொட்டி மற்றொரு நிறுவனமான மின்ஷெங் டிரஸ்ட் நிறுவனம் நடத்திய ஆய்வில் அந்த நிறுவனத்திடமும் போலி தங்கக் கட்டிகள் ஈடாக காட்டப்பட்டுள்ள விவரம் வெளியானது.   இது குறித்து கிங்கோல்ட் நிறுவனத் தலைவர் ஜியா  தாம் எதுவும் தவறு செய்யவில்லை எனவே சொல்லி வருகிறார்.  இதைத் தவிர வேறு என்ன அவரால் சொல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.