விழுப்புரம்:
மிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற  கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று தனது பணியை மீண்டும் தொடங்கி உள்ளார்.
தமிழகத்தை கொரோனா தொற்று புரட்டிப்போட்டு வரும் நிலையில், அதன் தாக்கத்திற்கு அமைச்சர்கள் முதல் அடிமட்ட மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக சட்டஅமைச்சர் சி.வி.சண்முகமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.
ஆனால், அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டது. 2 முறை நடத்தப்பட்ட சோதனையிலும் அவரதுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்றே தகவல் வெளியிடப்பட்டது. இருந்தாலும், அவர் கடந்த சில வாரங்களாக வெளியே தலைக்காட்டாமல் இருந்து வந்தார். இதன் காரணமாக அவர்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மீண்டும்  செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில்,   விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கொரனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இதில் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு தனது பணியை மீண்டும் தொடங்கி உள்ளார்.