சென்னை:
வடசென்னையின் பிரபலமானவர்களான கொடுங்கையூர் ஜம்புலி வடிவேலு, வியாசர்பாடி ஆதி கேசவன் ஆகிய 2 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக நள்ளிரவில் உயிரிழந்தனர்.
வடசென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான வியாசர்பாடி பகுதியில் பிரபலமானவர் வழக்கறிஞரும், தொழில்அதிபருமான ஆதிகேசவன். தங்க நகைகளை விரும்பி அணிபவர். எப்போதும் பெரிய சங்கிலியால்ஆன செயினை மாலை போல அணிந்திருப்பார். இவர்மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலுவையில் நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையானுக்கு பல லட்சம் மதிப்பிலான வைர கிரிடம் வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியவர். வியாசர்பாடி பகுதியில் நல்லது, கெட்டதில் பங்குபெறுபவர். ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த ஆதிகேசவன், கொரோனா பாதிப்பு காரணமாக மூச்சுத்திணறல் காரணமாக நள்ளிரவில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதுபோல கொடுங்கையூர் பகுதி முன்னாள் கவுன்சிலரும், பிரபலமானவருமான ஜம்புலி வடிவேலுவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார். இவர் தநத பகுதியில் சிப்காட் தொழிற்சாலை பகுதிகள் அடைக்க முக்கிய காரணமானவர். மேலும அந்த பகுதிக்கு தேவையா னஅடிப்படை பணிகளில் முன்னின்று செயல்படும் தன்மை உள்ளவர்.
வயது முதிர்வு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அதிகாலை அவர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இவர்களின் உடல் அடக்கம் இன்று நடைபெறுவதாக கூறப்படுகிறது. வடசென்னையின் முக்கிய புள்ளிகளான இவர்கள் மரணம் அடைந்துள்ள அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.