காதல் காட்சிகளில் நடிக்க மறுத்ததால் வாய்ப்புகளை இழந்த அபிஷேக்பச்சன்..

அபிஷேக்பச்சனை ஐஸ்வர்யாராய் திருமணம் செய்து கொண்ட பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்த தம்பதிக்கு ஆரத்யா என்ற 8 வயது மகள் இருக்கிறாள்.
மனைவி, தாய் என அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்றாலும் , ஐஸ்வர்யாராய் ‘’காதல் காட்சிகளில் நடிக்க மாட்டேன்’’ என்று பிடிவாதம் பிடித்ததில்லை.
ஆனால் அவர் கணவர் அபிஷேக்பச்சன், இதற்கு நேர் மாறான கொள்கைவாதி.
‘’ ஆரத்யா பிறந்த பின் காதல் காட்சிகள் மற்றும் கதாநாயகியுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்து அதில் தீர்மானமாக இருக்கிறேன்’’ என்கிறார், உலக அழகியின் மணவாளன்.
‘’ என் மகள் அசவுகரியாக உணரும் காட்சிகளைத் தவிர்த்து வருகிறேன். படம் பார்த்து விட்டு, அவள் முகம் சுழித்து,’’ இங்கே என்ன பண்றீங்க?’ என்று அவள் கேட்கும் காட்சிகளில் நடிப்பதை மறுத்ததால் நிறையப் படங்களை நான் இழந்துள்ளேன்’’ என்று மனம் திறந்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார், அபிஷேக்.
‘’ஒரு படத்தில் நடிக்கக் கையெழுத்துப் போடும் போதே, நெருக்கமான காட்சிகள் கிடையாது அல்லவா?’’ என இயக்குநர்களிடம் தெளிவு படுத்திக்கொள்வேன்’’ என்றும் சொல்கிறார், அவர்.
-பா.பாரதி.
Patrikai.com official YouTube Channel