லாக் டௌன்.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும்..

மக்கள் தொகையில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் எந்த புள்ளிவிவரங்கள் எடுத்தாலும் அதிகப்படியாகவே தெரியவரும்.

கொரோனா தொற்று பாதிப்பும் அப்படித்தான்.. பரிசோதனை செய்யச் செய்ய நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே தான் இருக்கும்..

இன்னொரு பக்கம் 100 நாட்களுக்கு மேலும் மக்களை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்தால் விபரீதம் இதைவிட மோசமாக இருக்கும்..

வெளியே நடமாட முடியாததால் மனதளவிலும் உடலளவிலும் கடுமையான சோர்வு.. வருமானம் கிடையாது..விரக்தி சலிப்பு எல்லாம் பெருகிக்கொண்டே போகும்.. நாட்டின் முக்கால்வாசி பேரின் நிலைமை இப்படித்தான். நோய்த்தொற்றைவிட இது மிகவும் கொடூரமான சூழல்…

என்னதான் தீர்வு? லாக்டௌனை முடிந்தவரைத் தளர்த்துவதுதான்..

முகக்கவசம், சமூக இடைவெளி.. மக்கள் இயக்கமாக மாற வேண்டும்.. இந்த இரண்டையும் பின்பற்றாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் இருந்து உடனே விலகும் மனப்பான்மை பொதுமக்களுக்கு வரவேண்டும்..

விலகுபவர்கள் பிழைப்பார்கள்.. வீம்பு பிடிப்பவர்கள் வில்லங்கத்தில் சிக்குவார்கள்..

மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரையை எந்தளவுக்குத் தமிழக அரசு பரிசீலிக்கிறதோ அதை விடப் பலமடங்கு மற்ற அம்சங்களையும் பரிசீலிக்கவேண்டும்..

நம்ம நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்ற விரக்தி எல்லாவற்றையும்விட கொடியது..

மத்திய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசே சுயமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்..

விட்டுவிட்டு இழுத்தால் தான் மூச்சு.. ஒரேடியா இழுத்துப் பிடிச்சா மொத்தமா போச்சு..

நன்றி : ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு