வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,76,568 உயர்ந்து 1,00,75,115 ஆகி இதுவரை 5,00,626 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,76,568 பேர் அதிகரித்து மொத்தம் 1,00,75,115 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,547 அதிகரித்து மொத்தம் 5,00,626 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 54,54,548 பேர் குணம் அடைந்துள்ளனர். 57,748 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,581 பேர் அதிகரித்து மொத்தம் 25,96,537 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 512 அதிகரித்து மொத்தம் 1,28,152 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 10,81,437 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,887 பேர் அதிகரித்து மொத்தம் 13,15,941 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 994 அதிகரித்து மொத்தம் 57,103 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 7,15,905 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,852 பேர் அதிகரித்து மொத்தம் 6,27,646 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 188 அதிகரித்து மொத்தம் 8,969 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,93,362 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,131 பேர் அதிகரித்து மொத்தம் 5,29,577 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 414 அதிகரித்து மொத்தம் 16,103 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,10,146 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரிட்டனில் நேற்று 890 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 3,10,250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 100 பேர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 43,514 ஆக உள்ளது.