சென்னை:
ணியாளர்களுக்கு கொரோனா இருந்தால் அலுவலகத்தை மூட வேண்டியதில்லை என்று  தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. அரசு அலுவலகங்கள் 50 சதவிகித பணியாளர்களைக்கொண்டு இயக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தலைமைச்செயலக ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தலைமைச்செயலகம் 2 நாள் மூடப்பட்டு கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், அலுவலகத்தை மூட வேண்டாம் என்று தமிழகஅரசு புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது. அதில்  ஒரு பணியாளர் அல்லது இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் முழு அலுவலகத்தை மூட வேண்டிய அவசியமில்லை. கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தபின் பணியை தொடரலாம்.
அதிகளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டால் கிருமிநாசினி தெளித்த பின் 2 நாட்களுக்கு அலுவலகத்தை மூட வேண்டும்”
இவ்வாறு அதில்  குறிப்பிடப்பட்டுள்ளது.