ஜெயம் ரவி நடித்த ‘டிக் டிக் டிக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஜெயம் ரவியின் மகன் ஆரவ்.

அந்த படத்திற்காக ஆரவ்விற்கு சிறந்த அறிமுக குழந்தை நட்சத்திரத்திற்கான விருது வழங்கி கௌரவித்தது எடிசன் விருது.

இந்நிலையில் ஜெயம் ரவி மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

பொன்னியின் செல்வன் படத்தின் ஒரு முக்கிய காட்சியில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவி நடிப்பதாக இருந்ததாம். ஆனால், ஆரவ்விற்கு ஸ்கூல் எக்ஸாம் என்று இருந்ததால் அவரை நடிக்க வைக்க முடியவில்லை என்று ஜெயம் ரவி கூறியுள்ளார்

[youtube-feed feed=1]