சென்னை:

வேலூர்,சேலம், மதுரை, கிருஷ்ணகிரி, தேனி  மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளது.

சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் இன்று 10 செவிலியர்கள் மற்றும் 13 பயிற்சி மருத்துவர்களுக்கு நோய் தொற்று பரவியிருப்பது உறுதியாகி உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, பல மாவட்டங்களிலும் தொற்று பரவல் உச்சமடைந்து வருகிறது.

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு  89 ஆக அதிகரித்து உள்ளத. 

வேலூர் மாவட்டத்தில் நேற்று (25ந்தேதி)  172 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 750 ஆக இருந்தது.  168 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில்,  579 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 3 பேர் பலியானதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.

சேலம் மாவட்டம்:
சேலம் மாவட்டத்தில் இன்று முதல்முறையாக  101 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால்  சேலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத் எண்ணிக்கை 670 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 352 பேர் குணமடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நேற்றைய நிலவரப்படி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 569 இருந்தது. இந்நிலையில் இன்று மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 101 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 670 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 352 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் சேலம் மாவட்ட மக்கள் ஒவ்வொருவரும் முக கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மதுரை மாவட்டம்

மதுரையில் இன்று மேலும் புதிதாக 175 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு  உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை  1,454 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, மாவட்டத்தில் 204 பேர் பாதிக்கப்பட்டதையடுத்த மொத்த எண்ணிக்கை 1,279 ஆக இருந்தது. அவர்களில் 448 பேர் குணமடைந்த நிலையில் 820 பேர் சிகிச்சை பெற்று வந்தனர் .

இந்த நிலையில், இன்று 175 பேருக்கு கொரோனா இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 995 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை மதுரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணகிரியில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று – வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்வு

தேனியில் புதிதாக 32 பேருக்கு கொரோனா தொற்று * மொத்த பாதிப்பு எண்ணிக்கை 469ஆக உயர்ந்துள்ளது.