சென்னை:
தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து, பல்வேறு அதிரடி தகவல்களை அவிழ்த்து விட்டுள்ளார் மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்.
சென்னையில் நேற்று (24ந்தேதி) ஒரே நாளில் 1,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 45,814 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று 6வந்தவர்களில் இதுவரை 26,472 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 18,673 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் பலி எண்ணிக்கை 668 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 12 மண்டலங்களில் நோய் தொற்று ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் பல்வேறு தகவல்களை தெரிவித்து உள்ளார்.
அதன்படி,
சென்னையில் வீடு வீடாக சென்று மக்கள் உடல்நிலையை ஆய்வு செய்வது தொடர்கிறது.
நாளொன்றுக்கு 3,500 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது
கொரோனா தொற்று இருப்பவர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது
கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதார தூய்மைக்காக 20ஆயிரம் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு காலை, மாலை உணவு வழங்கப்டுகிறது.
தூய்மை பணியாளர்களை அழைத்து செல்ல 95 பேருந்துகள் பயன்படுத்தப்படுகிறது.
தூய்மை பணியாளர்களுக்கு தினமும் முகக்கவசம் வழங்கப்பட்டு வருகிறது
இவ்வாறு அவர் கூறினார்.
ஆணையாளரின் அதிரடி அறிவிப்புகள் அனைத்தும் காற்றோடு கலந்துவிடுகிறது.. செயலில் இல்லை என்பது தூய்மை பணியாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களின் குற்றச்சாட்டு.