பெட்ரோல் விலையைத் தாண்டிய டீசல் விலை..

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை  எண்ணை நிறுவனங்கள் தினந்தோறும் ஏற்றிய வண்ணம் உள்ளன.

நேற்று டீசல் விலை மட்டும் உயர்த்தப்பட்ட நிலையில், தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலையை விலை , டீசல் விலை அதிகரித்து இருந்தது.

காரணம் என்ன?

ஊரடங்கால் சரிந்த பொருளாதார நிலையைச் சரிக்கட்டுவதாகச் சொல்லிக்கொண்டு, டெல்லி மாநில அரசு சகட்டு மேனிக்கு எல்லா பொருட்கள் மீதும் வரியை உயர்த்தியது.

மதுபானம் மீது 70 % வரி விதிக்கப்பட்டு, மது பாட்டில்கள் கடையிலேயே தேங்கியதால், பின்னர் வரியைக் குறைத்தது.

இந்த நிலையில் டெல்லியில் கடந்த மே மாதம் 5 ஆம் தேதி எண்ணைப் பொருட்கள் மீதான ’’வாட்’  வரி கடுமையாக உயர்த்தப்பட்டது.

பெட்ரோலை விட டீசலுக்கு அதிகமாக ‘வாட்’ வரி விதிக்கப்பட்டதால் நேற்று டெல்லியில் டீசல் விலை 79 ரூபாய் 88 காசாக இருந்தது.

ஆனால் பெட்ரோல் விலை ரூ. 79.76 காசு.

இந்தியாவில் பெட்ரோலை விட , டீசல் விலை அதிகரித்துள்ளது, இதுதான் முதன் முறையாக இருக்கும்.