தேனி:

தேனி மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்ட உள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 224 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. தேனி மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால்  இன்று (24ந்தேதி)  மாலை முதல் 30ந்தேதி வரை  முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தேனியில் 138 பேருக்கும், போடிநாயக்கனூரில் 21 பேருக்கும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், பெரியகுளம் பகுதியில் 65 பேரும் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 219 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில்,  நேற்று 48 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக  பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 284 ஆக உயர்ந்தது.  இதுவரை  129 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 153 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இ துவரை 2 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் இன்று மேலும் 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.