
லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதனின் மகன் அஸ்வின் ராஜா.
கும்கியில் தம்பி ராமையாவுடன் நகைச்சுவைக் கூட்டணி அமைத்து அசத்தியிருந்த அஷ்வின் அந்தப் படத்துக்கு பின்னர் கும்கி அஷ்வின் என பெயர் மாற்றம் செய்து கொண்டார்.
சில தினங்களுக்கு முன்பு தனது திருமணம் ஜூன் 24-ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவித்தார். அதன்படி, இன்று (ஜூன் 24) காலை சென்னையில் அஸ்வின் – வித்யாஸ்ரீ இருவரின் திருமணம் நடந்தது.
கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழ்த் திரையுலகினர் பலரும் அஸ்வின் – வித்யாஸ்ரீ தம்பதியினருக்கு தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளத்திலும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Patrikai.com official YouTube Channel