சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று மாநிலம் முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கை, முழு ஊரடங்கு, திட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில், இதுவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை  64,603 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை கொரோனாவில் இருந்து 35,339பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை  833 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே கடந்த 19ந்தேதி முதல் ஜூன் 30ந்தேதி வரை கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர், நள்ளிரவு முதல் மதுரை மாவட்டத்துக்கும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தேனி மாவட்டத்திலும் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படு கிறது.

இந்த நிலையில் பிற மாவட்டங்களிலும் கொரோனா அதிகரித்து வருவதால் கட்டுப்படுத்துவதற் கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது மற்றும், மீண்டும் பொது ஊரடங்கு அமல்படுத்தலாமா என்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.