டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,56,115 ஆக உயர்ந்து 14,483  பேர் மரணம் அடைந்துள்ளனர்

நேற்று இந்தியாவில் 15,665  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 4,56,115 ஆகி உள்ளது.  நேற்று 468 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 14,483 ஆகி உள்ளது.  நேற்று 10,437 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,58,574 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,83,003 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 3,214 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,39,010 ஆகி உள்ளது  நேற்று 248 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,531 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,925 பேர் குணமடைந்து மொத்தம் 69,631  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 3,947 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 66,602 ஆகி உள்ளது  இதில் நேற்று 68 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,301 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,711 பேர் குணமடைந்து மொத்தம் 39,313 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 2,516 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 64,603 ஆகி உள்ளது  இதில் நேற்று 39 பேர் உயிர் இழந்து மொத்தம் 833 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,227 பேர் குணமடைந்து மொத்தம் 35,339 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 549 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,429 ஆகி உள்ளது  இதில் நேற்று 26 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,711 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 604 பேர் குணமடைந்து மொத்தம் 20,521 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 571 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,893 ஆகி உள்ளது  இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 588 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 515 பேர் குணமடைந்து மொத்தம் 12,116 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.