நெல்லை:
தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ள, சாத்தான்குளம்  பகுதியைச் சேர்ந்த தந்தை மகன், காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட விவகாரம் தொடர்ந்து,கோவில்பட்டி மாவட்ட நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார்.
ஊரடங்கு நேரத்தை தாண்டி, கடையை திறந்து வைத்திருந்தாக கூறி, சாத்தான்குளத்தில் கடை நடத்திவரும் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தையை தாக்கி, காவல்நிலையத்துக்குச் அழைத்துச் சென்று அடித்து, உதைத்த  வழக்கு பதிவு செய்து, அடுத்தநாள், இருவருக்கும் நெஞ்சுவலி என்று கூறி, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இருவரும் மரணம் அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினரின் இந்தநடவடிக்கை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. காவல்துறையினர் அவர்கள் மீது சரமாரியாக தாக்கியதால், அவர்கள் உயிரிழந்ததாக கூறப்படகிறது.
அவர்களது உடல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனைக்கு வைக்கப்பட்டுஉள்ளது.
இந்த விவகாரம் மாவட்டத்தில் பதற்றத்தை உருவாக்கி உள்ள நிலையில், கோவில்பட்டி மாவட்ட நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தி வருகிறார்