ஜீன் 15 அன்று இரவு லடாக் எல்லையில இந்திய சீனத் துருப்புகள் கடுமையாக தாக்கி கொண்டதில் இந்தியத் தரப்பில் 20வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனத் தரப்பில் 40+ வீரர்கள் உயிரிழந்தனர் என்ற தகவலும் பின்பு வெளியானது. ஆனால் சீனா தனது நாட்டு உயிரிழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இதற்கிடையில், இந்தியா வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்களை வெளியிட்டு அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து இந்தியர்கள் கண்ணிர்மல்க இறுதி வணக்கம் செலுத்தினர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், முதல்கட்டமாக இரு நாட்டு வெளியுறவுத்துறைஅமைச்சர்களும் காணொளி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து நேற்று (22/06/2020) 2வது கட்டமாக இரு நாட்டு உயர் ராணுவ அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தியா சீனா இடையேயான பதற்றத்தை குறைக்க தற்போது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
ஐந்து தலைமுறைகளுக்கு பிறகு ஜீன்15ல் நடைபெற்ற சண்டைக்கு பிறகும் கூட தற்போது பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்றது. சுமார் 11 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நீடித்ததாக கூறப்படகிறது.
இந்த நிலையில், பேச்சுவார்த்தையின்போது பேசப்பட்டது என்ன என்பது குறித்து ராணுவம் விளக்கம் அளித்து உள்ளது.
அதில், லடாக் எல்லை தொடர்பாக சீனா – இந்தியா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது என்றும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் 2 நாடுகளின் ராணுவத்தை சேர்ந்தவர்களும் தங்களுடைய முகாமிற்கு திரும்ப முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.
கிழக்கு லடாக்கில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இரு நாட்டு ராணுவத்தினரும் தங்களது படைகளை விலக்கிக்கொள்ள ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும்,
மேலும், 2 நாட்டு படைகளை விலக்கிக் கொள்வதற்கான நடைமுறைகள் தொடர்ந்து விவாதிக்கப்படும் என்றம் இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.