ஸ்ரீநகர்: காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் கிட்டத்தட்ட கடந்த 30 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த திரையங்க காம்ப்ளக்ஸ்(2 அடுக்கு) மீண்டும் திறக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அடுத்தாண்டு மார்ச் மாதம் முதற்கொண்டு இது செயல்படும் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பேசிய டக்ஸல் குழுமத்தின் விஜய் தார், மல்டிப்பிளக்ஸ் தியேட்டர் செயல்படுவதற்கு தடையில்லாச் சான்றிதழ் கிடைத்துவிட்டதாகவும், இதன்மூலம் இந்தப் பள்ளத்தாக்கு இளைஞர்களுக்கு ஒரு புதிய விடிவு கிடைத்துள்ளது என்றும் கூறினார். தற்போது பயன்பாட்டில் இல்லாத பிராட்வே சினிமா ஹாலின் உரிமையாளர் இவர்.
“முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், ஸ்ரீநகரின் இளைஞர்களுக்கு சினிமா மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் கிடைக்கப்பெற வேண்டும். அந்த வசதிகள் கிடைப்பதில் இங்கு பெரிய பற்றாக்குறை நிலவுகிறது” என்று என்னிடம் கூறியிருந்தார் என்கிறார் விஜய் தார்.
கடந்த 1990களில், பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக சினிமா காம்ப்ளக்ஸ் மூடப்பட்டது. இதே டக்ஸல் குழுமத்தால் முன்பு குறுகிய நாட்களுக்கு இசைத் திருவிழா உள்ளிட்ட சில நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
கடந்த 1990களில் இப்பகுதியின் பல சினிமா தியேட்டர்கள், துணை ராணுவப் படையினருக்கான தங்குமிடங்களாக மாற்றப்பட்டன. அதேசமயம், காஷ்மீர் பகுதியில் கடந்த 2000ம் ஆண்டுகளின் துவக்கம் முதல் நீலம் சினிமா போன்ற சில நிறுவனங்களால் அவ்வப்போது சினிமாக்கள் திரையிடப்பட்டன. அதேசமயம், இவரை ‘ஒரு திரை’ தியேட்டர் ஆகும்.