கமதாபாத்

கமதாபாத் நகரில் ஜகந்நாதர் ரத யாத்திரை நடத்த குஜராத் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஒரிசா மாநிலம் பூரி நகரில் ஜகந்நாதர் கோவிலில் மூன்று தேர்களுடன் ஒவ்வொரு வருடமும் ரதயாத்திரை நடப்பது வழக்கமாகும்.   இந்த ரத யாத்திரைக்கும் கொரோனா பரவுதல் காரணமாக உச்சநீதிமன்றம் தடை விதித்து இருந்தது.  இன்று பல கட்டுப்பாடுகளுடன் ரத யாத்திரை நடத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

அகமதாபாத் நகரில் பூரி ரத யாத்திரையின் போது அதே பாணியில் மூன்ற் தேர்களுடன் ரத யாத்திரை நடப்பது வழக்கமாகும்.  இதைக் காண மாநிலம் முழுதும் இருந்து லட்சக் கணக்கானோர் வருவது வழக்கமாகும்.  இந்த வருடம் ரத யாத்திரையைப் பக்தர்கள் யாரும் பங்கு பெறாமல் நடத்த அனுமதிக்க கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம் தற்போது குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளதால் இந்த வருடம் மூன்று தேர்கள் கொண்ட ஜகந்நாதர் ரத யாத்திரையை அகமதாபாத் நகரில் நடத்தத் தடை விதித்துள்ளது